நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் நின்ற ரவுடி கைது
நாகர்கோவில், டிச.9 : நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே நின்ற வடசேரி அருகுவிளை பகுதியை சேர்ந்த லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (48) என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து சோதனை செய்த போது அவர் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது வடசேரி காவல் நிலையத்தில் குற்றவாளிகள் சரித்திர பதிவேடு பட்டியலும் உள்ளதாக போலீசார் கூறினர். இவரது வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர்.
Advertisement
Advertisement