Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து

புதுக்கடை, ஏப்.9: தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜெபர்சன் என்பவரது விசைப்படகில் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த விஜின் (30), நாகப்பட்டினத்தை சேர்ந்த வேலாயுதம் என்ற வினோத் (34) ஆகியோர் உட்பட பலர் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நேற்று கடலில் மீன் பிடித்து விட்டு இயந்திரபடகை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர். பின்னர் காலையில் சிறிது மீன்களை விற்பனை செய்துவிட்டு, படகு உரிமையாளரும் பணியாட்களும் வீட்டிற்கு சென்று விட்டனர். படகில் விஜின், வினோத் உள்ளிட்ட சிலர் காணப்பட்டனர். நேற்று முன்தினம் மதியம் விஜின், வினோத் ஆகிய 2 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. திடீரென 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் கையில் வைத்திருந்த கத்தியால் விஜினை வெட்டி உள்ளார். உடன் இருந்தவர்கள் தடுக்க முற்பட்ட போது அவர்களையும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜின் காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத்தும் காயம் ஏற்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.