குளச்சல், நவ. 5: குளச்சல் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). தனியார் வாகன டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது பைக்கில், குளச்சலில் இருந்து ரீத்தாபுரம் நோக்கி சென்றுள்ளார். ரீத்தாபுரம் சர்ச் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரமேஷ்குமார் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


