திருவனந்தபுரம், நவ.1: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வளவண்ணூர் பகுதியில் யத்தீங்கானா மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஒரு ரீல்ஸை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது அவனுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவனை சக மாணவர்கள் 18 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவன் கோட்டக்கல் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோட்டக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

