Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நித்திரவிளை அருகே வாலிபர் மீது தாக்குதல்

நித்திரவிளை, மே 22: நித்திரவிளை அருகே பூத்துறை அலங்காமடம் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ராஜ் (24). மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பூத்துறை பகுதியில் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரையுமன்துறை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த அஜோ (31) என்பவர் நீ ஏன் போக்குவரத்திற்கு இடையூறாக பைக்கை வைத்துள்ளாய் என்று கேட்டு, பைக் சாவியால் ஆஸ்டின் ராஜை தலையில் குத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த ஆஸ்டின் ராஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் அஜோ மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.