Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

10ம் வகுப்பு தேர்வில் தக்கலை அமலா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

தக்கலை,மே 26: 10ம் வகுப்பு தேர்வில் தக்கலை அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியடைந்துள்ளது. அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைவரும் தேர்சியடைந்தனர். இதனால் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. மாணவி முஹ்ஷிதா 494 மதிபெண்களுடன் முதலிடத்தையும், மாணவி ரேஷ்மா 493 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தையும், மாணவி லிஷா 492 மதிப்பெண்களுடன் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் அறிவியலில் 6 பேர், சமூக அறிவியல், கணிதத்தில் தலா இருவர் என 100க்கு 100 மதிப்பெண் எடுத்தனர். 400க்கு மேல் 48 மாணவர்களும், 450க்கு அதிகமாக 43 மாணவிகள் மதிப்பெண் பெற்றனர். அரசு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவிகளை பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஜெபா, முதல்வர் அருட்சகோதரி லிற்றி, அருட்சகோதரிகள் ஜெபஷீலா, ஷாஜினி, மற்றும் ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வாழங்கி பாராட்டினர்.