Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்எஸ்எல்சி தேர்வில் முளகுமூடு ஜோசப் மெட்ரிக் பள்ளி சாதனை

தக்கலை,மே 22: எஸ்எஸ்எல்சி தேர்வில் முளகுமூடு புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தனர். மாணவி பிரஜினி 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஷனா என்ற மாணவி 489 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெரிஷா என்ற மாணவி 486 மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளனர். சாதனை புரிந்த மாணவிகளையும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்களை பள்ளியின் தாளாளரும் பசலிக்க அதிபருமான அருட்தந்தை கில்பர்ட் லிங்க்சன் மற்றும் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி மோழி ஜோசப், பசிலிக்கா பேரவையினர், கல்வி குழு உறுப்பினர்கள்,பங்கு மக்களும் பாராட்டினார்கள்.