Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பால்குளம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: கல்லூரி முதல்வர் தகவல்

அஞ்சுகிராமம், மே 20: பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சரோஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வட்டக்கோட்டை அருகே பால்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026- 27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் 07-05-2026 முதல் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றது.இக்கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம், பி.காம் வணிகவியல், பி.பி.ஏ வணிக மேலாண்மையியல், பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல், பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை மே 7, 2026ம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் மே 29, 2026ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்ய இறுதி நாளாகும் என்றும் கூறியுள்ளார்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லூரியில் இயங்கும் மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க தங்களது 10, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், புகைப்படம், கைப்பேசி உள்ளிட்ட ஆவணங்களுடன் கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.