Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூதப்பாண்டி அருகே ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை

பூதப்பாண்டி, மே 20: பூதப்பாண்டி அருகே ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பூதப்பாண்டி அருகே இறச்சக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கோபி (52). அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன் சிகிச்சை பெற்று மது குடிப்பதை நிறுத்தியுள்ளார். பின்னர் மீண்டும் வழக்கம் போல் மது குடிக்க ஆரம்பித்துள்ளார். இதனை அவரது மனைவி ஆனந்த பவானி (43) கண்டித்துள்ளார்.

அதனால் மன உளைச்சலில் இருந்து வந்த கோபி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறைக்குள் சென்று தூக்கு போட்டு தொங்கியுள்ளார். நீண்ட நேரமாக கோபி வெளியே வராததால் சந்தேகமடைந்த ஆனந்த பவானி ஜன்னல் வழியாக பார்த்த போது கோபி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் கோபியை கீழே இறக்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனந்த பவானி பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.