Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூதப்பாண்டி அருகே கஞ்சா செடியுடன் 2 சிறுவர்கள் கைது

நாகர்கோவில், அக்.14: பூதப்பாண்டி எஸ்.ஐ. கதிரவன் தலைமையில், நேற்று முன் தினம் சீதப்பால் அருகே உள்ள அரசன்குழி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக இரு இளம் சிறார்கள் கையில் பையுடன் வந்தனர். போலீசார் நிற்பதை பார்த்ததும், கையில் இருந்த பையை போட்டு விட்டு தப்ப முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்து, பையை சோதனை செய்தனர். அப்போது ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கஞ்சா செடி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து இரு இளம் சிறார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ஒருவர் 9ம் வகுப்பு படித்து விட்டு படிப்பை பாதியில் நிறுத்தியவர் ஆவார். மற்றொருவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது. இருவரும் முறையை 15, 16 வயது நிரம்பியவர்கள் என்பதால், இருவரும் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த செடியை சீதப்பால் பகுதியில் வளர்த்து வந்தது தெரிய வந்தது. அந்த செடி சுமார் 20 செ.மீ. உயரம் வளர்ந்து இருந்தது.