Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

நாகர்கோவில், அக்.14: நாகர்கோவில் கார்மல் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. குமரி உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கொசு ஒழிப்பு படை அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கி நிற்கிறதா? தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகி உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்காமல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியிலும், டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் வார்டு வாரியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் மாணவர்களிடையே டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோலப்போட்டி உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று காலை மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின்படி கார்மல் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கோலப்போட்டி மற்றும் கொசு புழு உற்பத்தி ஆகாமல் தடுப்பது குறித்து சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.