Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடக்கம்

நாகர்கோவில், ஜூன் 4: 2026-2027ம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பைத் துறை இயக்குநர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் இந்தக் கலந்தாய்வில் இணையவழியில் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ள தகுதியான பணியாளர்கள் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி மாலை 6 மணி வரை http://onlinetn.com/counseling/login.aspx என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் தங்களது பணி சார்ந்த விவரங்களை எவ்விதத் தவறுமின்றி இணையதளத்தில் கவனமாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய சான்றிதழ்களை சரிபார்த்து முறையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.