Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி அருகே வாகனம் மோதி முதியவர் படுகாயம்

கன்னியாகுமரி, ஜூன் 4: தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியை சேர்ந்தவர் ஜெக்கோவா (64). அவரது மகன் பிரபு (39). மதபோதகரான இவர் சபையில் ஊழியம் செய்து வருகிறார். தற்போது பிரபு ஊழியத்துக்காக கன்னியாகுமரி பகுதியில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் தந்தை ஜெக்கோவா வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஜெக்கோவா பொற்றையடி- கொட்டாரம் சாலையில் நடந்து சென்றார்.  அவர் மந்தாரம்புதூர் சந்திப்பு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் ஜெக்கோவா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பிரபு கன்னியாகுமரி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.