சாமியார்மடம், செப்.30: சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் நேற்று காலை 10.30 மணி அளவில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோயில் நோக்கி கேரள அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது.அப்போது திடீரென பஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோதியது. இதில் காரின் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தால் சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு சுமார் 11:30 மணி ஆனது. இந்த காலதாமதம் மேலும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியது. விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


