புதுக்கடை, செப்.30:துக்கடை அருகே தேங்காப்பட்டணம் ஐவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சுந்தர்(48). இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று சுந்தர் தனது கடைக்கு சென்றுவிட்டு பைக்கில் கருங்கல்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆனான்விளை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுந்தர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா இனயம் புத்தன் துறையை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமது கபீர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


