Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்

கன்னியாகுமரி, மே 25 : தென்தாமரைக்குளம் அருகே கின்னிகண்ணன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். அவரது மகன் ராஜேஷ்குமார் (33). அவரது மனைவி கவுசல்யா(31). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. இந்த நிலையில் கடந்த 8ம்தேதி ராஜேஷ்குமார் வீட்டுக்கு வந்தபோது கவுசல்யா மற்றும் மகளை காணவில்லை. மனைவி, மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து ராஜேஷ்குமார் தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கவுசல்யா கணவருடன் ஏற்பட்ட தகாறில் மகளுடன் சென்னைக்கு சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.