Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

களியக்காவிளை அருகே வீட்டின் மீது பாட்டில் வீசி ஜன்னல், கதவு உடைப்பு 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம், மே 18: களியக்காவிளை அருகே மடிச்சல் நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித். இவருக்கும், திக்கணங்கோடு மத்திகோடு பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் தீபக்ராஜன் (30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அஜித் வீடு அமைந்துள்ள இடத்துக்கு சென்ற தீபக்ராஜன் மற்றும் கண்டால் தெரியும் நபர் பாட்டிலில் பெயிண்ட் போன்ற திராவகத்தை நிரப்பி அதனை அஜித் வீட்டு கதவு மற்றும் ஜன்னல் மீது வீசினர்.

இதில் ஜன்னல், கதவு உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து அஜித்தின் தம்பி அஜின் (31) களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீபக்ராஜன் மற்றும் கண்டால் தெரியும் நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.