Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுகாதாரமான பாரதம் உருவாக்க கோரி இன்ஜினியர் பைக் பயணம் கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி, மே 18: உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர் டாப்சி உபாத்தியாய் (24). இன்ஜினீயர். இவர் சுகாதாரமான பாரதம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பைக்கில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் மீரட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தனது பைக் பயணத்தை தொடங்கினார்.

பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 19 மாநிலங்கள் வழியாக 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்த அவரை கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க செயலாளர் முருகன் வரவேற்றார். இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லியில் தனது பைக் பயணத்தை முடிக்கிறார். மொத்தம் 700 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.