Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு: 2 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கடை, ஏப். 13: புதுக்கடை அருகே முள்ளுர்துறை கடற்கரை கிராமம் 9ம் அன்பியத்தை சேர்ந்தவர் டியோன்ஸ்(40). கடல் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தேங்காப்பட்டணம் பெரிய பள்ளி சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் இனயம் புத்தன்துறையை சேர்ந்த அமீன் (32), அதே பகுதி அசிஸ் (29) ஆகியோர் போதையில் சாலையில் இடையூறாக நின்றிருந்தனர்.

இதை டியோன்ஸ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரத்தில் அமீன், அசிஸ் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து டியோன்சை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த டியோன்ஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் எஸ் ஐ ஜான்ரோஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.