Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புதுக்கடை அருகே நர்சிங் மாணவி மாயம்

புதுக்கடை, ஏப். 13: புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை 23ம் அன்பியத்தை சேர்ந்தவர் தவரோஸ் (55). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் மகள் சகாய சுசித்ரா(20) என்பவர் இனயம், ஹெலன் நகர் பகுதியில் உள்ள புனித ஆன்டனி நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சகாய சுசித்ரா அவர் படிக்கும் கல்லூரிக்கு செல்வதாக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து அவரை கண்டுபிடித்து தரும்படி தவரோஸ் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.