Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேங்காப்பட்டணம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்: கணவன் போலீசில் புகார்

புதுக்கடை, ஏப். 13: புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அம்சி என்ற இடத்தை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி. இவரது மனைவி ஜெனிபா (27) இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெனிபா தனது மகளுடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சேகர் தனது மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் புதுக்கடை போலீசில் புகாரளித்தார். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து மாயமான தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.