Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளச்சல் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை வரவேற்று தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.கலந்துரையாடல்

குளச்சல், ஜூன்8: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பிஷி ஜாஸ்மின் தலைமை வகித்தார். தொடர்ந்து மாணவர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

மாணவர்கள் தைரியத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் மாநில காங்.செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராஜ், கவுன்சிலர் ரமேஷ், மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்லின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஜெபசிங், ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.