Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளச்சலில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வறை விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்

குளச்சல், ஜூன் 8: கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் புதிதாக மீனவர் ஓய்வறை கட்டும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து விஜய் வசந்த் எம்.பி. ஓய்வறையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கோபால கிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வன் ஜார்ஜ், நகர காங்.தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில காங்.செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், பிரான்சீஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட செயலாளர்கள் அந்திரியாஸ், மோகன், செயல் தலைவர் ராஜூவ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் எனல்ராஜ், ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், நகராட்சி கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஷாபி, பனிக்குருசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.