குலசேகரம், நவ. 5:கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகத்தின் சார்பில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட அணி தேர்வுப் போட்டிகள் வருகின்ற 07.11.2026 (சனிக்கிழமை) ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள வாள் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி, தங்களது ஆவணங்களுடன் குறிப்பிட்ட நாளில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்தகட்டப் போட்டிகளுக்குத் தேர்வு பெற விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகத்தின் தலைவர் பி.கே. சிந்துகுமார் மற்றும் செயலாளர் எஸ். அமிர்தராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


