Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

என்.எம்.எம்.எஸ் படிப்புதவித் தொகை தேர்வு; விண்ணப்பிக்க நவ.13 வரை அவகாசம் நீட்டிப்பு

நாகர்கோவில், நவ.5: பள்ளி மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 2026-27-ம் கல்வியாண்டிற்கான இத்தேர்வு வரும் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக இணையவழியில் விண்ணப்பிக்க ஏற்கனவே நவம்பர் 3-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது வரும் நவம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சசிகலா சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.