Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஊழியரின் கணவரை அடித்த தவெக நகர பொறுப்பாளர் கைது

மதுராந்தகம், மே 14: தாவெக மதுராந்தகம் நகர பொறுப்பாளர் தன்னிடம் வேலை செய்த ஊழியரின் கணவரை அடித்து பலத்த காயம் ஏற்படுத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மதுராந்தகம் நகரில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருபவர் காஜா மொய்தீன் (எ) ராஜா. இவர் தவெக மதுராந்தகம் நகர பொறுப்பாளராக உள்ளார். இந்நிலையில், இவரது சூப்பர் மார்க்கெட்டில் அம்பிகா என்ற ஊழியர் வேலை செய்து வந்தார். இந்த பெண் ஊழியருக்கும், அவரது கணவருக்கும இடையே பஜார் பகுதியில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கேள்விபட்ட ராஜா சம்பவ இடத்திற்கு சென்று பெண் ஊழியரின் கணவரை தாக்கி உள்ளார். இதனால் ஏற்பட்ட பலத்த காயத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அம்பிகாவின் கணவர் மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் ராஜாவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.