Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டம் பறக்கவிட்டபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு மேற்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (60). கட்டிட தொழிலாளியான இவரது மகன் கார்த்தி (13) செவிலிமேடு பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளான்.

இந்நிலையில் கோடை விடுமுறையில் உள்ள சிறுவன் கார்த்தி தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்று நேற்று பட்டம் பறக்க விட்டுக்கொண்டிருந்தான்.

பட்டம் பறக்க விடும் ஆர்வத்தில் கவனிக்குறைவாக வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து பின்புற தலையில் படுகாயம் அடைந்தான்.

உடனே குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் உடனடியாக சிறுவன் கார்த்தியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டம் விட்ட சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் செவிலிமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.