Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

காஞ்சிபுரம், மே 9: காஞ்சி புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர், மோர் பந்தலை, முன்னாள் எம்எல்ஏ க.சுந்தர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நேற்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் தூண் ஆகிய இரு இடங்களில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான க.சுந்தர் கலந்துகொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள், சுற்றுலா பயணிகள் என அனைவருக்கும் இளநீர், வெள்ளரிக்காய், மோர், குளிர்பானம், தர்பூசணி, வெள்ளரிப்பழம் ஜூஸ் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், மகளிர் அணி செல்வி, பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், மற்றும் நிர்வாகிகள் வெங்கட்ராமன், எஸ்.பி.ரமேஷ், எஸ்.கே.பி.கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், இளஞ்செழியன் மாமல்லன், கே.ஏ.செங்கோட்டுவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.