Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சைபர் எக்ஸ் ஹன்ட் நிகழ்ச்சி

காஞ்சிபுரம், செப்.30: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சைபர் பாதுகாப்புத்துறை சார்பில், “சைபர் எக்ஸ் ஹன்ட்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் ஏட்டுக்கல்விக்கும், தொழில்முறைத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டி, நெறிமுறை சார்ந்த ஹேக்கிங், கிரிப்டோகிராபி, இணைய சுரண்டல் மற்றும் டிஜிட்டல் தடயவியல் போன்ற பிரிவுகளில் மாணவர்களின் நடைமுறை திறன்களை சோதிக்கும் வகையில் அமைந்தது.

போட்டியில் 120 மாணவர்கள் 57 அணிகளாக பிரிந்து தங்களின் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சிகள், தொழிற்கூட பார்வைகள் மற்றும் வேலைவாய்ப்பு சாத்தியக்கூறுகளை வழங்கும் நோக்கில் “டெவின் இன்னோவேஷன்” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்வில், டெவின் இன்னோவேஷன் நிறுவன நிர்வாக தலைவரும், செயற்கை நுண்ணறிவு பொறியாளருமான சகானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பின் எதிர்கால வாய்ப்பு குறித்து வழங்கிய கருத்து மாணவர்களுக்கு ஊக்கமாக அமைந்தன.