காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில வழக்கறிஞர் பிரிவு குருராஜ், வர்த்தக அணி மணிகண்டன், வட்டார தலைவர் நிக்கோலஸ் மற்றும் நிர்வாகிகள் லோகநாதன், சாதிக்பாட்சா, பிரபு, யோகி உள்ளிட்ட பலர் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, எஸ்ஐஆர் என்ற பெயரில் நியாயமான ஜனநாயக முறைகளை மீறி வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கியது மற்றும் தரவுகளில் மாற்றம் செய்தது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவேண்டும்,
தேர்தலில் வெளிப்படை தன்மையை கொண்டுவர வேண்டும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும். ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக பதவி விலகுவதோடு, அவரை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


