உத்திரமேரூர், செப்.26: உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெறுமளவு விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. இதில் நெல், கரும்பு மட்டுமின்றி கீரைகள், வேர்க்கடலை, தானியங்கள், காய்கறி வகைகள், பழங்கள் என பல்வேறு விதத்தில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் பயிரிடும் பொருட்களை உள்ளூர் சநதைகளில் பெருமளவு லாபம் கிடைக்காததால் வந்த விலைக்கு இடைத்தரகர்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
விவசாயிகளும் தங்கள் விளைவித்த அனைத்து பொருட்களுக்கும் தகுந்த விலை பெற்று மகிழ்ச்சி அடைவர். எனவே உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு உத்திரமேரூரில் உழவர் சந்தையினை தொடங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


