வாலாஜாபாத், செப்.26: வாலாஜாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாலாஜாபாத் அரிமா சங்கத்தின் 31ம் ஆண்டு ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பூர்ணசந்திரன் கலந்து கொண்டு 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் அரிமா சங்கத் தலைவர் ஸ்ரீராமன், செயலாளர் சேஷாத்ரி, பொருளாளர் சந்திரபாபு உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார்.


