Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்போரூர் பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

திருப்போரூர், செப்.25: விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், திருப்போரூர் பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாருதல், ஏரிக்கு நீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல், வெள்ளநீர் வெளியேறும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா, சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக நெம்மேலி சாலை உள்ளிட்ட மழையின்போது வெள்ளநீர் வெளியேறும் கால்வாய்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதன் ஒரு பகுதியாக கடைகள், வீடுகள், திருமண மண்டபங்கள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், டயர் பஞ்சர் ஒட்டும் கடைகள் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்குகிறதா என்ற சோதனையில் ஈடுபட்டனர். கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.