காஞ்சிபுரம், அக்.22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், கலெக்டர் தி.சினேகா தலைமையில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.


