செங்கல்பட்டு, அக்.22: நகை கடன் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், எல்நினோ பாதிப்பு வரட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை செய்துவிட்டு கூலி கிடைக்காமல் காத்திருக்கும் மக்களுக்கு உடனடியாக பணத்தை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட பொருளாளர் விஜய்காந்த் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் அனு, மாவட்டத் தலைவர் சங்கர் மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்டத் துணைத் தலைவர் அரி கிருஷ்ணன், நிர்வாகிகள் அர்ஜுன் குமார், முருகேசன், ஜெகநாதன், முருகேசன், ராஜேந்திரன், சசிக்குமார், ராஜேந்திரன், யாக்கோபு உள்ளிட்ட பலர் பேசினர்.


