காஞ்சிபுரம், அக்.22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகாவின் புகைப்படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் சிலர் போலி வாட்ஸ்-அப் எண்களில் இருந்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதனை அறிந்து மாவட்ட கலெக்டர் சினேகா, இத்தகைய போலி கணக்குகளில் இருந்து வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அந்த எண்களை உடனடியாக பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுமாறும் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து கலெக்டர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட போலி எண்களைக் கண்டறிந்து அதன் பின்னணியில் உள்ள நபர்களைப் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


