Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆசிரியர்கள் கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன்

ஸ்ரீபெரும்புதூர், ஆக.21: ஒரகடம் அருகே சரியாக படிக்காததை ஆசிரியர்கள் கண்டித்ததால் அரளி விதை சாப்பிட்ட பிளஸ் 2 மாணவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரகடம் அடுத்த வேண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (45). இவரது 16 வயது மகன், பண்ருட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவனை, சரியாக படிக்காததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த மாணவன், பள்ளி முடிந்ததும் மாலை வீட்டிற்கு வந்து, அரளி விதை அரைத்து சாப்பிட்டுள்ளார். அதிர்ச்சியான பெற்றோர், மாணவனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.