Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உத்திரமேரூர் அருகே காய்கறி உற்பத்தி குறித்து பழங்குடியினருக்கு பயிற்சி

உத்திரமேரூர், ஆக.21: உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில், பழங்குடியினர் குடியிருப்பில் குழந்தைகள் கண்காணிப்பகம் சேவை நிறுவனம் சார்பில், இயற்கை முறையில் வீடுதோட்டம் அமைத்து காய்கறிகள் உற்பத்தி செய்வது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடந்தது. நஞ்சு இல்லா காய்கறிகளை உற்பத்தி செய்வது எப்படி, வீடுகளில் வீணாகும் தண்ணீரை கொண்டு எவ்வாறு இயற்கை முறையில் காய்கறி செடி மற்றும் கீரை வகைகளை வளர்க்க முடியும் என்பது குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், கீரை வகைகள், முருங்கை, பூசணி, சுரக்காய், பாகற்காய், காராமணி, அவரை உள்ளிட்ட விதைகள் அடங்கிய தொகுப்பு மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட்டது. முகாமில், 40க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.