காஞ்சிபுரம், ஆக.20: காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 15,652 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு வர்த்தமான் நகர் பகுதியில் போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் முறையாக மூடப்படாததால், நேற்று அவ்வழியாக சென்ற பசுமாடு ஒன்று, பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது.
பள்ளத்தில் சிக்கிய பசுமாட்டை நீண்ட நேரம் போராடியும் அகற்ற முடியாததால், பொக்லைன் இயந்திரத்தை வரவைத்து, அப்பகுதி மக்கள் பசுமாட்டினை பள்ளத்தில் இருந்து உயிருடன் மீட்டனர். அங்கு, பள்ளம் தோண்டிய பிறகு பொதுமக்கள் அவ்வழியாக செல்லாமல் இருக்க தடுப்பு வழி அமைக்காததால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்து நடந்த பிறகு மாநகராட்சி சார்பில் அந்த பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.



