Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தான முகாம்

காஞ்சிபுரம், ஆக.20: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்ட கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை பொது மருத்துவமனை இணைந்து 43வது ரத்த தானம் முகாம் நேற்று முன்தினம் ஒலிமுஹம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடத்தியது. கிளை தலைவர் சாகுல் ஹமீத், மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் ஆகியோர் தலைமை தாங்கினர். காஞ்சி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் முன்னிலை வகித்தார்.

முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் 68 பேர் ரத்த தானம் செய்தனர். இதில், காஞ்சி கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணை தலைவர் சாகுல், துணை செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் பாசில் ஆகியோர் கலந்துகொண்டு ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்வில், ரத்த வங்கி அலுவலர் டாக்டர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.