குன்றத்தூர், ஆக.20: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் உள்ள அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் நேற்று அதிகாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் அரங்கம்குப்பம் பசுபதி என்பவருக்கு சொந்தமான சுசிகிபோட் மற்றும் இஞ்சின் மீது மின்னல் விழுந்ததில் படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனைக்கண்ட கிராம மக்கள் பொன்னேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த படகை கிராம மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் பொன்னேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் இன்ஜின் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



