காஞ்சிபுரம், ஆக.19: காஞ்சிபுரத்தில் இன்று மற்றும் நாளை `உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி இன்று மற்றும் நாளை காஞ்சிபுரம் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.
முகாம் நடைபெறும் நாளன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் தொடர்பாக மனுக்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பட்டா மாறுதல் தொடர்பாக தங்களது மனுக்களை இம்முகாமில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.



