காஞ்சிபுரம், ஆக.19: காஞ்சிபுரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 133 பேருக்கு பணி நியமன ஆணைகளை, வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 32க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை சேர்ந்த மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்தனர்.
முகாமில் 300க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில், 133 பேருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான பணி நியமன ஆணைகளை, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் வழங்கினார். வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.



