காஞ்சிபுரம், ஆக.19: காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் தூய இதய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த, ஆலயத்தின் 77ம் ஆண்டு தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. செங்கைமறை மாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாக தந்தை டேவிட் குமார் தலைமை தாங்கினார். தூய இதய அன்னை அலங்கரிக்கப்பட்ட தேரில், காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அமல அன்னை மண்டல பொறுப்பாளர் எஸ்.டி.ஆரோக்கியராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலியும் நற்கருணை ஆசிரும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தூய இதய அன்னையை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் தேவசகாயம், உதவி பங்கு தந்தை பிரிட்டோ, ஆன்மீக குரு சைமன், பங்கு பேரவையினர், பங்கு பொதுமக்கள் செய்திருந்தனர்.



