காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள மாரத்தான் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என உடற்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர் குணாளன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலை சார்பில், `பிட் - இந்தியா மாரத்தான் 2026’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
உடல் நலம், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை இவற்றை ஊக்குவிக்கும் வகையில், இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தால் 3 கி.மீ வீதம் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் நபர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் www.kanchiuniv.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு சங்கரா பல்கலைக்கழகம் உடற்கல்வித் துறை இயக்குநர் குணாளன், கைப்பேசி எண்: 9976999554 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என இவ்வாறு கூறியுள்ளார்.



