Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கண்டலேறுவில் இருந்து தமிழகத்துக்கு 465 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

குன்றத்தூர், ஆக.14: ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு 465 கன அடியாக அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்நிலையில், ஜூலை முதல் அக்டோபர் வரை திறக்க வேண்டிய தண்ணீர் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் நேற்று தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 465 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் கால்வாயில் சற்று கூடுதலாக தண்ணீர் வருகிறது. கடந்த வாரம் 365 கன அடியாக வந்த தண்ணீர் உயர்ந்து நேற்று 465 கன அடியாக தண்ணீர் வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.