காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003ன் விதி கீழ்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய தயாரிப்பு வெளிநாட்டு டாஸ்மார்க் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2026) நாளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, மேற்கண்ட நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து உரிமதாரர்கள், உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



