Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அருங்குணம் கிராமத்தில் செல்லியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்

மதுராந்தகம், ஆக.13: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பாக்குதி கிராம மக்கள் தாய் வீட்டு சீராக பழம் மற்றும் இனிப்பு வகைகளை கையில் ஏந்தியபடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வாணவேடிக்கையுடன் தாரை தப்பட்டை முழங்க கொண்டு வந்தனர்.

தொடர்ந்து செல்லி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏவும், தவெக துணை பொதுச் செயலாளருமான மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ் பாபு, ஜமீன் எண்டத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனின் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.