Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

குன்றத்தூர், ஆக.13: அகரம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அகரம் கோபால் ரெட்டி காலனி 1வது குறுக்குத் தெருவில் ஸ்ரீ ரத்தின விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோயிலின் பூசாரி அனந்தராமன் என்பவர் பூஜைகளை முடித்து நடையை மூடிவிட்டு சென்றார்.

தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் அனந்தராமன் கோயிலை திறக்க வந்தபோது, கதவின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து கோயில் நிர்வாகி ஜெயபாலன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.