அரசு அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம், 6 சவரன் திருடிய 2 பேர் கைது
தாம்பரம், நவ.12: குரோம்பேட்டை, சோழவரம் நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன் (70), ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு ஊழியர். இவர், தனது மனைவியுடன், பெங்களூருவில் உள்ள மகள் வீட்டில், கடந்த ஜூலை மாதம் முதல் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து, கடந்த 2ம் தேதி வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.10 லட்சம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 6 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த் புகாரின் பேரில், குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மணிமங்கலம் அருகே உள்ள சிறுவாஞ்சேரி, குப்பைமேடு பகுதியை சேர்ந்த சிவா (35), நாட்டரசன்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (25) ஆகிய இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். உறவினர்களான இவர்கள் இருவர் மீதும் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம், ஒரு சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.